Compartir
Vazhi Vazhi Valluvar (en Inglés)
R. P. Sethu Pillai (Autor)
·
Nilan Publishers
· Tapa Blanda
Vazhi Vazhi Valluvar (en Inglés) - R. P. Sethu Pillai
Más barato Libro Nuevo
Importado
Envío: 14 a 19 días háb.
S/ 144,17S/ 64,88
Más rápido Libro Nuevo
Importado
Envío: 13 a 17 días háb.
S/ 153,93S/ 76,96
Costos de importación incluídos en el precio ✅
Reseña del libro "Vazhi Vazhi Valluvar (en Inglés)"
தமிழ் நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந் நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்று தொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமை யுலகம் பொன்னே போற் போற்றி வரு கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாராட்டப்பெறுகின்ற பாரதியார் இயற்றிய கவிதைகளும் திருக்குறளால் வளம் பெறும் முறையினைக் காட்டுதலே, 'வழிவழி வள்ளுவர்' என்னும் இந் நூலின் நோக்கமாகும். இவற்றுள் 'கம்பராமாயணத்திலே வள்ளுவர்' என்ற கட்டுரை சென்னை வானொலியில் யான் நிகழ்த்திய சொற்பொழி வின் சுருக்கம். 'பாரதியார் கவிதையிலே வள்ளுவர்' என்பது டாக்டர் R. K. சண்முகம் செட்டியாருடைய அறுபதாம் ஆண்டு நினைவு மலரில் யான் எழுதிய கட்டுரையின் பெருக்கம். இவற்றை நூலாக வெளியிடு வதற்கு அன்பு கூர்ந்து இசைவு தந்த சென்னைப் பல் கலைக் கழகத்தாருக்கும், ஒப்பு நோக்கி உதவிய அன்பர் திரு. M. A. துரையரங்கனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகும்.சிலப்பதிகாரம் தமிழ் நாட்டின் சிறந்த கலைச் செல்வம். அது முற்காலத் தமிழகத்தின் சீர்மையை விளக்கும்; முத்தமிழின் பெருமையை முழக்கும். இத்தகைய சிலம்புச் செல்வத்தை வழங்கிய செஞ்சொற் கவிஞர் இளங்கோ வடிகள். அவர் தவச் செல்வமும் தமிழ்ச் செல்வமும் ஒருங்கே பெற்றவர்; திருவள்ளுவர் அருளிய திருக்குறளைப் பொன்னே போற் போற்றியவர்.சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகி பிறந்த நாடு, புலவர் பாடும் புகழுடைய சோழ நாடு. வள்ளுவர் குறித்த வருபுனலும் இருபுனலும் உடையது அவ்வள நாடு. Read more
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.